அதன் பேரில் போலீசார் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று பார்த்தபோது, அங்கு 2 பேர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்ததில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த குப்புசாமி (60), அம்மாசை (58) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சூதாட்டப் பயன்படுத்திய சீட்டு கட்டுகள், பணம் ரூ. 5,520 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.