ஈரோடு மின் பயனீட்டாளர்களுக்கு நாளை குறைதீர் கூட்டம்

ஈரோடு ஈவிஎன் சாலையில் உள்ள நகரியம் மின் விநியோக செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (5ம் தேதி) மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், ஈரோடு நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மின் பயனீட்டாளர்கள் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என நகரியம் மின் விநியோக செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி