விலையில்லா சைக்கிள் பொருத்தும் பணி 50 சதவீதம் நிறைவு

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 1 படிக்கும் 13,669 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான உதிரிபாகங்கள் கடந்த செப்டம்பர் மாதம் வந்தடைந்த நிலையில், சைக்கிள்களைப் பொருத்தும் பணி 50 சதவீதம் நிறைவடைந்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இந்த சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன. இதில் 6,070 மாணவர்கள் மற்றும் 7,599 மாணவிகள் பயனடைவார்கள்.

தொடர்புடைய செய்தி