கரும்பு லோடு லாரி கவிழ்ந்து விபத்து

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரிலிருந்து நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்திற்கு கரும்பு லோடு ஏற்றி கொண்டு வந்துக் கொண்டிருந்த லாரி ஒன்று, கர்கேகண்டி செக் போஸ்ட் அருகில் வளைவில் திரும்பியபோது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் ரோட்டின் ஓரமாக லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அந்த லாரியின் ஓட்டுநருக்கு காயம் ஏற்படவில்லை என்றும் கிளீனருக்கு மட்டும் இடது கால் பாதம் அருகில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி