ஈரோடு: காட்டுப்பன்றி தாக்கி மின்வாரிய ஊழியர் படுகாயம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மின் வாரியத்தில் ஊழியராக பணியாற்றி வருபவர் பழனிச்சாமி, இவர், திகினாரை கிராமத்தில் ஒரு தோட்டத்தில் ஏற்பட்ட மின் பழுதை சரி செய்ய சென்றபோது புதர் மறைவில் இருந்து வந்த காட்டுப்பன்றி திடீரென பழனிச்சாமியை தாக்கியது. 

இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தாளவாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வனத்துறை மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

தொடர்புடைய செய்தி