தாளவாடி மலைப்பாதையில் அமர்ந்திருந்த புலி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி செல்லும் சாலையில் நேற்று இரவு புலி ஒன்று திடீரென ரோட்டிற்கு வந்து இருசக்கர வாகனங்களை துரத்தியது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வாகனங்களை நிறுத்தினர். புலி சிறிது நேரம் சாலையில் அமர்ந்திருந்து பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. இதனைத் தொடர்ந்து வாகனங்கள் செல்லத் தொடங்கின. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி