ஈரோடு: வாய்க்காலில் மூழ்கி வாலிபர் பலி

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ராமலிங்கபுரத்தில், தேங்காய் உரிக்கும் தொழிலாளியான தங்கராசு (33) மதுபோதையில் கீழ்பவானி வாய்க்காலில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார். நண்பர்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சடலத்தை மீட்டனர். சென்னிமலை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி