ஈரோடு: மனைவியை அடித்து, சரமாரியாக குத்திய கணவன்

சென்னிமலை அருகே பேபி என்ற பெண், தனது கணவர் கார்த்தியுடன் இரண்டு வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் நடுரோட்டில் பேபியை, கார்த்தி வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பைக் டேங்க் கவரில் வைத்திருந்த ஊக்கு கம்பியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் காயமடைந்த பேபி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்திய கணவர் கார்த்தி சென்னிமலை காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

தொடர்புடைய செய்தி