ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வரட்டுப் பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று (நவம்பர் 3) காலை 6 மணி நிலவரப்படி 28.41 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 33.46 அடி ஆகும். தொடர்ந்து அணைக்கு 10 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.