அந்தியூரில் 15 வயது சிறுமி கடத்தல்: வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

அந்தியூரில் 15 வயது சிறுமியை கடத்தி, திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கவுரி சங்கர் என்ற வாலிபருக்கு ஈரோடு மகிளா நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2021 ஜூலை 8 அன்று சிறுமியை கடத்தி திருமணம் செய்த கவுரி சங்கர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி