ஊசிமலை கிராமத்தைச் சேர்ந்த 50 வயது விவசாயி சித்தன் வீட்டில் கஞ்சா செடிகள் வளர்ப்பதாக பர்கூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்று போலீசார் சோதனை மேற்கொண்டபோது, அவரது வீட்டில் இரண்டு கஞ்சா செடிகளும், மூன்று மான் கொம்புகளும் கண்டெடுக்கப்பட்டன. இதனையடுத்து, பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சித்தனை கைது செய்தனர்.