அனைத்து கட்சி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

அந்தியூர் அருகேயுள்ள குருநாத சுவாமி கோவில் வனம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில், வருவாய்த்துறை சார்பில், அனைத்து கட்சி வாக்குசாவடி முகவர்களுக்கான பயிற்சி நேற்று நடந்தது. அந்தியூர் தேர்தல் பிரிவு துணை தாசில்தார் கங்கா முன்னிலை வகித்தார். தாசில்தார் இளஞ்செழியன் தலைமை வகித்தார். மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மகேஸ்வரி கலந்து கொண்டு, திருத்தப்பணி சம்பந்தமான ஆலோசனை வழங்கினார். சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணியில், வாக்குசாவடி நிலைய அலுவலர்களுக்கு, கட்சி பூத் ஏஜெண்ட், டிஜிட்டல் பூத் ஏஜெண்ட் ஆகியோர், பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளில் உதவிவிட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மேலும், விண்ணப்ப படிவத்தை எவ்வாறு பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் பயிற்சியளிக்கப்பட்டது. அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தி. மு. க. , அ. தி. மு. க. , வி. சி. க. , உள்ளிட்ட ஒன்பது கட்சிகளை சேர்ந்த பூத் ஏஜெண்ட்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி