ஈரோட்டில் மது, லாட்டரி விற்ற 2 பேர் கைது

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்த முனியசாமி என்பவர் 15 மதுபாட்டில்கள் மற்றும் சரக்கு வாகனத்துடன் கைது செய்யப்பட்டார். மேலும், ஈரோட்டில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற தம்பிராஜ் என்பவர் 6 லாட்டரி சீட்டுகள் மற்றும் செல்போனுடன் கைது செய்யப்பட்டார். இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி