உத்தரகண்டின் ஹரித்வார், ராஜலோக் காலனிக்குள் புகுந்த யானை ஒன்று அங்கு நின்றிருந்த காரை சேதப்படுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வனத்துறையினர் உடனடியாக விரைந்து வந்து, யானையை பத்திரமாக வனப்பகுதிக்குள் விரட்டினர். சமீப காலமாக மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையிலான மோதல்கள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.