சொத்துகளை பறித்து தாயை வீட்டை விட்டு விரட்டிய மகன்

நாகப்பட்டினம்: கீழ்ப்பிடாகையைச் சேர்ந்த 75 வயதான முத்துலட்சுமி என்ற மூதாட்டி, தனது சொத்துக்களைப் பறித்துக்கொண்டு வீட்டை விட்டு விரட்டிய இளைய மகன் மற்றும் மருமகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாகை ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். கணவர் இறந்து 20 ஆண்டுகளாக தனியாக வசித்து வரும் தனக்கு, மகன் மற்றும் மருமகள் வாழ்நாள் முழுவதும் பராமரிப்பதாகவும், மருத்துவ தேவைகளை கவனிப்பதாகவும் கூறி சொத்துக்களைப் பதிவு செய்து கொண்டதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி