திராவிட மாடல் அரசு 'சாரி ம்மா' அரசாக மாறிவிட்டது - விஜய்

போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த 24 பேரின் மரணத்துக்கும் நீதி வேண்டி இன்று (ஜூலை 13) தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து 5,000க்கும் அதிகமான தவெக நிர்வாகிகள் வந்திருந்தனர். அப்போது மேடையில் கருப்பு நிற ஆடையுடன் தோன்றி உரையாற்றிய விஜய், "திராவிட மாடல் அரசு என திமுக விளம்பரம் செய்து வருகிறது. ஆனால், உண்மையில் திராவிட மாடல் அரசு செய்த தவறுகளுக்காக சாரி கேட்டு 'சாரி ம்மா' அரசாக மாறிவிட்டது" என பேசினார்.

தொடர்புடைய செய்தி