தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்துக் கட்சி தலைவர்கள் தீவிர அரசியல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பல செய்தி நிறுவனங்கள் வாக்குக் கணக்கெடுப்பு எடுத்து வருகின்றன. இதில், பெண்களில் வாக்குகள் அதிகளவு திமுக-விற்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. திமுக கொண்டு வந்த பெண்கள் நலத்திட்டம் இதற்கு மையக் காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் இளம்பெண்களில் வாக்குகள் தவெக மற்றும் திமுக என இரண்டிற்கும் சமமாக கிடைக்க வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.