கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பேசிய தவெகவின் ஆதவ் அர்ஜுனா, “கரூரில் காவல் துறையினர் எங்களை வரவேற்றனர். வேறு எங்கும் எங்களை வரவேற்காத போலீசார் அங்கு மட்டும் ஏன் வரவேற்றனர்? எங்களின் கட்சியை ஒட்டுமொத்தமாக முடக்க திமுக முயற்சித்தது. கூட்ட நெரிசல் சம்பவம் நடந்ததும் கரூர் மாவட்ட எல்லையில் காத்திருந்தோம். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை தத்தெடுப்பேன் என விஜய் கூறினார்” என்றார்.
நன்றி: நியூஸ் தமிழ்