கோவை விமான நிலையம் அருகே நேற்று (நவ.02) இரவு சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது, 3 சமூக விரோதிகளால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். இது குறித்து பேசிய தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, "திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சமூக விரோதிகளுக்கு சட்டத்தின் மீதோ, காவல்துறையின் மீதோ அச்சமில்லை. திமுக அமைச்சர்கள் மற்றும் காவல்துறையினர் பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கின்றனர்" என கூறினார்.