உத்தரப்பிரதேசத்தின் சம்பலில், தனது மருமகளுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த மாமனார் ஷ்ரவன் குமார் குப்தா என்பவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சொத்துப் பிரிப்பு தொடர்பாக ஏற்பட்ட பிரச்னை காரணமாக, அவரது மகன் ரோஹித் மற்றும் மருமகள் முஸ்கன் தாக்கூர் ஆகியோர் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், முஸ்கன் நேற்று முன்தினம் கடைக்கு வந்து ஷ்ரவனை திட்டி தகராறில் ஈடுபட்டதால், அவமானத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.