வேடசந்தூரில் 12,213 இரட்டை பதிவு கொண்ட வாக்காளர்கள்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இரட்டை வாக்குகள் குறித்து அதிமுக புகார் மனு அளித்துள்ளது. வேடசந்தூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.பி. பரமசிவம், கட்சி பொறுப்பாளர்களுடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரை சந்தித்து, இரட்டை வாக்காளர்கள் குறித்து புகார் மனு வழங்கினார். வேடசந்தூர் தொகுதியில் சுமார் 12,213 இரட்டை வாக்குகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், ஒரே நபர் மூன்று இடங்களில் வாக்காளர் பதிவுகளை வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி