பழனியில் உள்ள பழனியாண்டவர் கல்லூரி அருகே, பொள்ளாச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்தின் குறுக்கே மதுபாட்டிலுடன் இளைஞர் ஒருவர் திடீரென பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்து ஓட்டுநர் உடனடியாக பிரேக் அடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. போலீசார் அந்த இளைஞர் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.