பழனி அடுத்த புது ஆயக்குடி கிராமத்தில் உள்ள சோழீஸ்வரர் திருக்கோவிலில், இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் நடைபெற்ற திருப்பணிகளுக்குப் பிறகு, குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. சேதமடைந்த கட்டிடங்கள், கோபுரங்கள், விக்கிரகங்கள் புதுப்பிக்கப்பட்டு, யாக சாலைகள் அமைத்து வேத மந்திரங்கள் முழங்க, புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தம் கோபுர கலசத்திற்கு ஊற்றப்பட்டது. பழனி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.