பழனி ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த துயர சம்பவத்தால் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.