கொடைக்கானல்: சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல்: இருவர் காயம்

அட்டுவம்பட்டி கிராஸ் பகுதியில் ஊர்வலமாகச் சென்றவர்களுக்கும், காரில் வந்த சுற்றுலாப் பயணிகளுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. காயமடைந்த சுற்றுலாப் பயணிகள் சதீஷ், ஜவஹர், மணிகண்டன் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கொடைக்கானல் போலீஸார் சார்லஸ், அருண், கருப்பையா, தினகரன் ஆகிய நால்வரை கைது செய்துள்ளனர். மேலும் 10 பேர் போலீஸாரால் தேடப்பட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி