பழனி கோயிலில் ரூ.3.43 கோடி காணிக்கை: தங்க, வெள்ளி பொருட்கள் குவிந்தன

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் காணிக்கை உண்டியல்கள் எண்ணப்பட்டதில், 33 நாட்களில் ரூபாய் 3 கோடியே 43 லட்சத்து 23 ஆயிரத்து 207 வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதில் தங்கம் 627 கிராம், வெள்ளி 18,080 கிராம் மற்றும் பல்வேறு நாட்டு கரன்சிகளும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன. உண்டியல் எண்ணிக்கையில் இணை ஆணையர் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி