திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தையம், பொருளூர், இடையகோட்டை பகுதிகளில் மாநில அரசின் மலரான செங்காந்தள் மலர் (கண்வலி கிழங்கு) அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது, பொருளூர், கள்ளிமந்தையம் பகுதிகளில் நடவு செய்யப்பட்ட கண்வலி கிழங்கு செடிகளில் செங்காந்தள் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இந்தப் பகுதிகள் வழியாகச் செல்லும் வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் இந்தப் பூக்களைப் பார்த்து ரசித்து, புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.