திண்டுக்கல்: அடிதடி தகராறு.. இளைஞர்கள் 4 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டி கிரேஸ் பகுதியில் சுப நிகழ்வுக்காக சீர்வரிசை கொண்டு சென்ற இளைஞர்கள் சாலையை மறித்து ஆட்டம் போட்டதால், கோவை பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் கோவை இளைஞர்கள் 3 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொடைக்கானல் காவல்துறையினர் அட்டுவம்பட்டி பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி