திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பாண்டியராஜபுரம் பகுதியில் மதுரை சோழவந்தான் வழித்தடத்தில் சென்ற தனியார் மினி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த நிலக்கோட்டை தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுமக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு, காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.