திண்டுக்கல் அம்மைநாயக்கனூரை அடுத்த கண்ணார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜனாபாண்டியன், பிரியா தம்பதியினர் தங்கள் மகன் புகழ்தரண் (9) உடன் கொடைரோட்டில் இருந்து அம்மையநாயக்கனூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, முன்னாள் சென்ற மினி லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகினர். இந்த விபத்தில் சிறுவன் புகழ்தரண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். தந்தை ஜனாபாண்டியன், தாய் பிரியா ஆகியோர் படுகாயமடைந்து திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து அம்மைநாயக்கனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.