திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையத்தில் மாலை நேரத்தில் பேருந்துக்காக காத்திருந்த மாணவர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களை ஒரு வாலிபர் வீச்சு அருவாளுடன் அச்சத்தில் ஆழ்த்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.