திண்டுக்கல், நத்தம் பேருந்து நிலையத்தில் கையில் வீச்சருவாளுடன் சுற்றித்திரிந்த ரபிக்ராஜா (எ) அமு (22) என்ற வாலிபரை நத்தம் போலீசார் கைது செய்தனர். இவர் மீது கஞ்சா, வழிப்பறி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 9-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மருத்துவமனை மற்றும் நீதிமன்ற வளாகத்திலும் போலீசார், ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.