திண்டுக்கல் மாவட்டம் தென்னம்பட்டி ஊராட்சி புதூர் கெச்சேயினிபட்டி பகுதியைச் சேர்ந்த 70 வயதான பெருமாள் அம்மாள், தனது நிலத்தையும் வீட்டையும் அபகரிக்க முயன்ற உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். நீதிமன்றத்தில் சாதகமாக தீர்ப்பு வந்தும், உறவினர்கள் மிரட்டுவதால் இரு தினங்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், நீதிமன்றத்திலும் மூதாட்டி தங்கியுள்ளார்.