திண்டுக்கல், சிறுமலை வனச்சரகத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் காட்டு மாடு இறந்து கிடந்த நிலையில், வனத்துறையினர் அதன் உடலை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, கால்நடை மருத்துவர் மூலம் உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர். இருப்பினும், வன உயிரின இறப்பு மற்றும் உடற்கூறு ஆய்வுகளுக்கான விதிமுறைகளைப் பின்பற்றாமல் ரகசியமாக கள ஆய்வு மற்றும் உடற்கூறு ஆய்வு நடைபெற்றதாக வன ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.