கத்தியைக் காட்டி பணம் பறித்த சிறுவர்கள் கைது

திண்டுக்கல், R. M. காலனி மெயின் ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த ராமசாமி என்பவரிடம் திண்டுக்கல் மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த ஆரோக்கிய கிளின்டன்(22), ரிச்சர்டு(20) மற்றும் 2 சிறுவர்கள் என 4 பேர் கத்தியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி பணம் பறித்ததாக ராமசாமி புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா, சார்பு ஆய்வாளர் வாசு மற்றும் காவலர்கள் அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை நேற்று(செப்.25) கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி