திண்டுக்கல்லில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் அனைத்து பொதுமக்களுக்காக இலவச ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி பேகம்பூரில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஷேக் பரீத் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திமுக மாவட்ட செயலாளர் பழனி எம்எல்ஏ ஐ. பி. செந்தில் குமார் சிறப்புரையாற்றினார். திண்டுக்கல் மேயர் இளமதி, மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் அப்துல்சமது உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். கிழக்கு மாவட்ட பொருளாளர் அப்துல் அகமது நன்றி கூறினார்.