ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத முதியவர் பிணம்

திண்டுக்கல் ரயில் நிலைய நடைமேடை 1-ல் சுமார் 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையிலான போலீசார், முதியவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது திண்டுக்கல் ரயில்வே காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி