ஸ்ரீ பட்டாபிஷேக ராமர், விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே நி. பஞ்சம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ பட்டாபிஷேக ராமர் கோவில், அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கும்பாபிஷேகம் இன்று (03.11.25) வெகு விமரிசையாக நடைபெற்றது. காலை 10 மணியளவில் யாகசாலை பூஜைகள் நிறைவடைந்ததும், சிவாச்சாரியார்கள் புனித நீர் கலசங்களை ஊர்வலமாக எடுத்து வந்து கோபுரங்களில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி