சீவல்சரகு ஸ்ரீ பொம்மையா சாமி கோயில் மாலை தாண்டும் விழா

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சீவல்சரகு கிராமத்தில் உள்ள ஸ்ரீ பொம்மையா சாமி மாலை தாத்தையா மலைக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாலை தாண்டும் விழா நேற்று (ஆகஸ்ட் 18) வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னோர்களை வழிபடும் இந்த விழாவில், திண்டுக்கல், கரூர், திருச்சி, தேனி மாவட்டங்களைச் சேர்ந்த 13 மந்தைகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு, 250க்கும் மேற்பட்ட எருதுகளை 3 கிலோமீட்டர் தூரம் வரை ஓட்டி மகிழ்ந்தனர். கரூர் மாவட்ட மணல் நாடு மந்தையைச் சேர்ந்த எருது முதலாவதாக வந்தது.

தொடர்புடைய செய்தி