காரிமங்கலம் ஸ்ரீ தர்மராஜர் திருக்கோவிலில் புதிய அறங்காவலர் பொறுப்பேற்பு

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரிமங்கலம் அருகே ஸ்ரீ தர்மராஜர் திருக்கோவிலில் அறங்காவலர் பொறுப்பு ஏற்கும் நிகழ்ச்சி நேற்று (ஆகஸ்ட் 21) மாலை நடைபெற்றது. திமுக நகரச் செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். திமுக ஒன்றிய செயலாளர் அன்பழகன், கண்ணபெருமாள், நிர்வாகிகள், காரியமங்கலம் மேல் தெரு திமுக பிரமுகர் கோவிந்தசாமி ஆகியோர் அறங்காவலராக பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அறநிலையத்துறை துறை ஆய்வாளர் துரை, செயலாளர், கவுன்சிலர்கள், கோவில் பூசாரி சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி