தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு காற்று திசை வேக மாறுபாடு காரணமாக தர்மபுரி உட்பட பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி, தர்மபுரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு நல்லம்பள்ளி, லளிகம், பென்னாகரம் பகுதிகளில் சாரல் மழையும், இன்று (ஆகஸ்ட் 17) அதிகாலை காரிமங்கலம், வெள்ளிச்சந்தை, மாரண்டஅள்ளி பகுதிகளில் கனமழையும் பெய்துள்ளது.