தர்மபுரி: காரிமங்கலத்தில் ரூ.90 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வார சந்தையில், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை வாங்கி விற்றனர். நேற்று ஒரே நாளில் ஆடுகள், மாடுகள், நாட்டுக்கோழிகள் என மொத்தம் ₹90 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதில் ஆடுகள் ₹4000 முதல் ₹18000 வரையிலும், மாடுகள் ₹8000 முதல் ₹60000 வரையிலும், நாட்டுக்கோழிகள் ₹300 முதல் ₹1100 வரையிலும் விற்பனையானது.

தொடர்புடைய செய்தி