தர்மபுரி: 15 வயது இளம்பெண் மாயம் காவல்துறையினர் விசாரணை

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏ. பள்ளிப்பட்டி அருகேயுள்ள எச். புதுப்பட்டி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி. கடந்த 18ம் தேதி இரவு, வீட்டில் தூங்கிக்
கொண்டு இருந்த போது திடீரென மாயமானார். அவரை குடும்பத்தினர் தொடர்ந்து நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகள் என பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி அவரது தாய் மேகலா, ஏ. பள்ளிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், காவலர்கள் இன்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி