தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தர்மபுரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நவம்பர் 05 புதன்கிழமை அன்று விடியற்காலையில் நல்லம்பள்ளி, லளிகம், கோவிலூர், நார்த்தம்பட்டி, வடக்கு தெரு கொட்டவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் இப்பகுதிகளில் சீதோஷ்ண நிலை மாறி, குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.