தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே பையர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த வீரபத்திரன் மற்றும் சென்யைன் ஆகியோர் நவ. 3 திங்கட்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, தேவராஜபாளையம் பகுதியில் எதிரே வந்த லாரி மோதி வீரபத்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் வந்த சென்யைன் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து காவல்துறை வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளது.