காரிமங்கலத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் தேங்காய் வார சந்தையில், நேற்று நவம்பர் 3ஆம் தேதி திங்கட்கிழமை, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள் தேங்காய் வாங்க வந்திருந்தனர். சுமார் 1.50 லட்சம் தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அளவைப் பொறுத்து ஒரு தேங்காய் ரூ. 20 முதல் ரூ. 31 வரை என மொத்தம் ரூ. 25 லட்சத்திற்கு தேங்காய் விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.