தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு காற்று சுழற்சி காரணமாக தர்மபுரி உட்பட பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், கூத்தப்பாடி, நாகமரை, பெரும்பாலை, ஏரியூர், பி. அக்ரகாரம், நாகதாசம்பட்டி, பாப்பாரப்பட்டி, பாலக்கோடு வெள்ளிச்சந்தை, கடமடை, அரூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆடிப்பட்டத்தில் பயிர் நடவு செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.