தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை (நவ. 4) தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்றும், பணி ஓய்வின்போது ஊழியர்களுக்கு ரூ. 10 லட்சம், உதவியாளர்களுக்கு ரூ. 5 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதில் ஏராளமான அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்றனர்.