தருமபுரி சட்டமன்றத் தொகுதி நல்லம்பள்ளி வட்டம் இண்டூர் பகுதியில் பாமக ஒன்றிய நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று (நவ. 02) ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், வருகின்ற 09.11.2025 அன்று தருமபுரி வள்ளலார் திடலில் 'உரிமைமீட்க தலைமுறைகாக்க எழுச்சி நடைபயணம்' பொதுக்கூட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் பாமக முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.