அரூர் வாரச்சந்தையில் ரூ.35 லட்சம் வர்த்தகம்; வியாபாரிகள் மகிழ்ச்சி

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே கம்பைநல்லூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும் சிறப்பு வாரச்சந்தையில் நேற்று விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர். ஆடுகள் ரூ.5000 முதல் ரூ.12,000 வரையிலும், நாட்டுக்கோழிகள் ரூ.300 முதல் ரூ.1250 வரையிலும் விற்பனை செய்யப்பட்டன. நேற்று மட்டும் சுமார் 35 லட்ச ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இந்த சந்தை விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் நல்ல லாபம் ஈட்டித்தருவதாக உள்ளது.

தொடர்புடைய செய்தி